R TV

R TV
total pageviews

one and ONLY best MEDIA

one and ONLY best MEDIA

R TV (Pudukkottai) ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.

‘த்ரிஷா  இல்லனா  நயன்தாரா’

இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ்  தற்போது  நடித்து வரும்  படம்  ‘த்ரிஷா  இல்லனா  நயன்தாரா’.  இதில் ஜி.வி.பிரகாஷுக்கு  ஜோடியாக  கயல்  ஆனந்தி  நடித்து வருகிறார்.  மேலும்  சிம்ரன்  முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்து  வருகிறார்.  பல்வேறு  இயக்குனர்களிடம் இணை  இயக்குனராக  பணியாற்றிய  ஆதிக் ரவிச்சந்திரன்  இப்படத்தை  இயக்கி  வருகிறார்.  ரிச்சர்ட்  எம்.நாதன்  ஒளிப்பதிவு  செய்யும்  இப்படத்திற்கு  ஜி.வி.பிரகாஷே  இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின்  படப்பிடிப்பு  சமீபத்தில்  தொடங்கி விறுவிறுப்பாக  நடந்து  வருகிறது.  இளைஞர்களைப் பற்றி  உருவாகும்  இப்படத்தின்  ஆடியோ  உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே  ரசிகர்களிடையே  படத்தின் மீதான  ஆர்வம்  அதிகமாக  உள்ளது.

இந்நிலையில்  இப்படத்தின்  டீசரை  நாளை(15-04-2015)  வெளியிட  முடிவு செய்துள்ளனர்.  இந்த  டீசர் அனைத்து  இளைஞர்களுக்கும்  பிடிக்கும்,  அவர்களின் வாழ்க்கையில்  ஒரு  பகுதியை  நினைவுக்  கூறும் வகையில்  அமைந்திருக்கும்  என்று தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் 

R TV PUDUKKOTTAI



புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்தது.


புதுக்கோட்டை, 13 - 04 - 2015

புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆலங்குடி மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த இடி–மின்னலுடன் மழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை நகர வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் கடுமையான கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

கோடை காலத்தில் பெய்துள்ள இந்த மழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குடி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கத்தரி, வெண்டை பயிர்களுக்கு நேற்று பெய்த மழை பயன் உள்ளதாக இருந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். இதே போல் ஆலங்குடி, வடகாடு, மரமடக்கி, கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பூ வகைகளும் இந்த மழையால் அதிக மகசூல் தரும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

                   

R TV pudukkottai சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....

................சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....................


》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்

》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்

》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்

》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்

》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்

》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்

》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்

》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)

》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்

》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம்

》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்... இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!

R TV PUDUKKOTTAI :- தந்தையும் மகளும்

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொல்கிறார் ”என் கையை கெட்டியமாக பிடித்துக்கொள் மா “, ஆற்றில் தண்ணீர்
நிறையப்போகிறது, பத்திரம் மா” என்று.........
உடனே, மகள் சொல்கிறாள் அப்படின்னா “நீங்க என் கைய புடிச்சிகிங்க பா”.
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.!!!!
நான் உங்கள் கையை பிடித்தால்,,,,ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப்
பிரியவாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள்
--------------என்றாள் மகள்.----------------

R TV NEWS : -

புதுக்கோட்டை, 09-04-2015
புதுக்கோட்டையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளைத் தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ.ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா எதிரில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளைத் தொடங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபாஸ்தியன், எம்.முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், எஸ்.சங்கர். எஸ்.பொன்னு சாமி, ஏ.ஸ்ரீதர், க.செல்வராஜ், எம்.உடையப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பு மணவளான், டி.சலோமி, எஸ்.பாலசுப்பிரமணியன், பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கால் தடங்கள் 2 பதிந்திருந்தது ....



புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அந்த பகுதியினர் குல தெய்வ கோவிலாக வழிபட்டு வருகின்றனர். நேற்றிரவு பவுர்ணமி பூஜை நடந்ததால் இங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.....

இந்த நிலையில் இன்று காலை கோவிலின் அருகில் உள்ள சுப்பிரமணியன் தீர்த்தக்குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த படிக்கட்டில் மனித கால் தடங்கள் 2 பதிந்திருந்தது தெரிந்தது. இதை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் அக்கம் பக்கத்தினரிடம் கூறினர். பின்னர் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

மேலும் இந்த கால்தடங்களைசிலர் அழித்து பார்த்தனர். ஆனால் அந்த கால்தடங்கள் அழியவில்லை.

மேலும் சிலர் அந்த பகுதியில் தங்கள் கால்தடம் பதிகிறதா? என்றும் முயற்சி செய்தும் பார்த்தனர். ஆனால் தங்கள் கால்தடம் பதியாததால் அங்கு பதிந்திருந்த கால்தடத்தை பக்தர்கள் தொட்டு வணங்கினர். அம்பாள் தீர்த்தக்குளத்தில் இறங்கி குளித்ததாகவும், அப்போது அம்பாள் கால் தடம் அங்கு பதிந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து கூட்டம் கூட்டமாக வந்த பக்தர்கள் அந்த கால் தடத்தை அம்மன் கால் தடம் என்று நினைத்து பக்தி பரவசத்துடன் வணங்கி செல்கின்றனர்.

இதனால் இன்று காலை முதலே பிடாரி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது......

R TV NEWS :

 தமிழ்நாடு  அரசு  கலை  பண்பாட்டு துறை திருச்சி  தமிழ்நாடு ஓவிய  நுண்கலை  குழு தென்னக  பண்பாட்டு மையம் தஞ்சை இணைந்து  நடத்திய  ஓவியர்கள் முகாம் நடைபெற்றது.


தமிழ்நாடு  அரசு  கலை  பண்பாட்டு துறை திருச்சி  தமிழ்நாடு ஓவிய  நுண்கலை  குழு தென்னக  பண்பாட்டு மையம் தஞ்சை இணைந்து  நடத்திய  ஓவியர்கள்  முகாம் நடைபெற்றது .

இதில் 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள் கலந்து கொண்டனர் , பயிற்சி அளித்த அசிரியர்கள் : ஓவியர் M .அய்யப்பா மற்றும் ஓவியர்  M .ராஜப்பா  பயிற்சி அளித்தார்கள் .............