R TV

R TV
total pageviews

one and ONLY best MEDIA

one and ONLY best MEDIA

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கால் தடங்கள் 2 பதிந்திருந்தது ....



புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அந்த பகுதியினர் குல தெய்வ கோவிலாக வழிபட்டு வருகின்றனர். நேற்றிரவு பவுர்ணமி பூஜை நடந்ததால் இங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.....

இந்த நிலையில் இன்று காலை கோவிலின் அருகில் உள்ள சுப்பிரமணியன் தீர்த்தக்குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த படிக்கட்டில் மனித கால் தடங்கள் 2 பதிந்திருந்தது தெரிந்தது. இதை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் அக்கம் பக்கத்தினரிடம் கூறினர். பின்னர் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

மேலும் இந்த கால்தடங்களைசிலர் அழித்து பார்த்தனர். ஆனால் அந்த கால்தடங்கள் அழியவில்லை.

மேலும் சிலர் அந்த பகுதியில் தங்கள் கால்தடம் பதிகிறதா? என்றும் முயற்சி செய்தும் பார்த்தனர். ஆனால் தங்கள் கால்தடம் பதியாததால் அங்கு பதிந்திருந்த கால்தடத்தை பக்தர்கள் தொட்டு வணங்கினர். அம்பாள் தீர்த்தக்குளத்தில் இறங்கி குளித்ததாகவும், அப்போது அம்பாள் கால் தடம் அங்கு பதிந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து கூட்டம் கூட்டமாக வந்த பக்தர்கள் அந்த கால் தடத்தை அம்மன் கால் தடம் என்று நினைத்து பக்தி பரவசத்துடன் வணங்கி செல்கின்றனர்.

இதனால் இன்று காலை முதலே பிடாரி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது......

No comments:

Post a Comment